search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் அதிபர் தற்கொலை"

    கோவை சிங்காநல்லூர் அருகே வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தொழில் அதிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சிங்காநல்லூர்:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் பூபால கிருஷ்ணன் (வயது 49). இவர் அந்த பகுதியில் டிப்பார்ட்மெண்டல் கடை வைத்து நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் வியாபாரத்தில் பூபாலனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். சம்பவத்தன்று கடையில் இருந்த பூபாலகிருஷ்ணன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்தார்.

    தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் பூபாலன் கிருஷ்ணன் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பூபால கிருஷ்ணணை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அங்கு இருந்த கத்தியை எடுத்து தனது வயிற்றில் குத்தினார். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    இரணியல் அருகே தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கந்து வட்டி கொடுமையா? இருக்குமோ என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இரணியல்:

    இரணியல் அருகே கண்டன் விளை வலியவீடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெப்ரின் ஜோஸ் (வயது 34).

    இவருக்கு பேபி லிசா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். தொழில் அதிபரான ஜெப்ரின் ஜோஸ் அந்த பகுதியில் ஹாலோபிளாக் கற்கள் தயாரிக்கும் தொழிற் சாலை நடத்தி வந்தார்.

    நேற்று காலை அவர், வழக்கம்போல வீட்டில் இருந்து புறப்பட்டு தனது தொழிற்சாலைக்கு சென்றார்.

    அந்த தொழிற்சாலையில் உள்ள தனது அறைக்கு சென்று பணிகளை ஜெப்ரின் ஜோஸ் கவனித்து வந்தார். பகல் நேரத்தில் அவரது அறைக்கு சென்ற ஊழியர்கள் ஜெப்ரின் ஜோஸ் வி‌ஷம் குடித்த நிலையில் அறையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக ஊழியர்களும், உறவினர்களும் சேர்ந்து அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஜெப்ரின் ஜோஸ் இறந்து விட்டார்.

    இதுபற்றி அவரது மனைவி பேபி லிசா இரணியல் போலீசில் புகார் செய்தார். இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    போலீசார் விசாரணையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஜெப்ரின் ஜோஸ் கடன் வாங்கியிருந்ததாகவும், அதில் ஏற்பட்ட மனவேதனையில் அவர், தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. கந்து வட்டி கொடுமை காரணமாக தொழில் அதிபர் ஜெப்ரின் ஜோஸ் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அதுபற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அகமதாபாத்தில் முன்னாள் காதலியின் ஆவி தன்னை இயக்குவதாக கூறிய தொழில் அதிபர் மனைவி, மகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் குணால் திரிவேதி (வயது 45). அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவர் தனது மனைவி கவிதா (45), மகள் ஷிரீன் (16), தாயார் ஜெயஸ்ரீ பென் (75) ஆகியோருடன் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார்.

    அவரது உறவினர்கள் திரிவேதிக்கு போன் செய்தனர். நீண்ட நேரமாக ரிங் கொடுத்தும் போனை எடுக்கவில்லை.

    எனவே, நேரடியாக வீட்டுக்கு வந்து பார்த்தனர். அங்கு குணால் திரிவேதி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். மனைவி கவிதா, மகள் ஷிரீன் ஆகியோர் அடித்து கொல்லப்பட்ட நிலையில் தரையில் பிணமாக கிடந்தனர். தாயார் ஜெயஸ்ரீபென் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதுபற்றி போலீசாருக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். 3 பேர் பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெயஸ்ரீபென் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வி‌ஷத்தை கொடுத்துள்ளனர். இதனால் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

    இந்த சம்பவத்துக்கு காரணம் என்ற என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குணால் திரிவேதி எழுதி வைத்திருந்த 2 கடிதங்கள் கிடைத்தன.

    அதில், தன்னை இறந்து போன முன்னாள் காதலியின் ஆவி இயக்குவதாகவும், அதனால்தான் குடிகாரனாக மாறி விட்டேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    மற்றொரு கடிதத்தில் காதலியின் ஆவி ஏவுவதால் குடும்பத்தினரை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்து விட்டு கடவுளிடம் செல்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    இந்த சாவுக்கு கடன் பிரச்சினையோ, மற்ற வி‌ஷயங்களோ காரணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

    தனது மூட நம்பிக்கையால் குணால் திரிவேதி குடும்பத்தையே கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. #tamilnews
    கர்நாடக மாநிலம் பெல்காவி அருகே வயிற்று வலி காரணமாக தொழில் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் பெல்காவி அருகே கணேஷ் புரத்தை சேர்ந்தவர் சைலேஷ் ஜோஷி (வயது 43). இவர் அம்ருத் பார்மா சூடிக்கல்ஸ் என்ற தொழில் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வந்தார்.

    இந்நிலையில், அவர் நேற்று தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் அறையில் சென்று பார்த்த போது சைலேஷ் ஜோஷி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இது குறித்து கேம்ப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சைலேஷ் ஜோஷி எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் நீண்ட காலமாக தான் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் அதனால் விரக்தியடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்ததாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். #Tamilnews
    ×